Saturday, December 6, 2008

கமுகர

பயணம் செல்லுபோது எந்த ஊரை கடந்தாலும் அந்த ஊருடன் சம்பந்தப்பட்ட பிரபலமானவரின் பெயர் சட்டென்று மனதில் உரைக்கும். கொத்தமங்கலம் என்ற பெயரை கேட்டவுடன் சுப்பு என்று மனம் சொல்கிறதல்லவா? அதுவும் கேரளா என்றால் கேட்கவே வேண்டாம். அடூர் கோபாலகிருஷ்ணன், மாளா அரவிந்தன், பரவூர் பரதன், கைதப்புரம் தாமோதரன் நம்பூதிரி என்று சடசடவென்று பெயர்கள் மரத்திலிருந்து பழம் போல வீழும்.

ஒருமுறை எங்கள் கடைக்கு ஒரு வாட்ட சாட்டமான மலையாளி வந்தார். ஒரு காகித டீலர் கம்பெனிக்கு போர்டு செய்ய வேண்டும். அவர் கேரளத்திலிருக்கும் அந்த கம்பெனியின் தலைமை நிர்வாகி. விசிட்டிங் கார்டை தந்தார். அதில் அவரது வீட்டு முகவரி கமுகர என்ற ஊரில் இருப்பதாக இருந்தது. உடனே எனக்குள் இருந்த 'ஊரும் பேரும்' ரசிகன் விழித்துக்கொண்டான்.
'கமுகர புருஷோத்தமன்"
சென்ற தலைமுறையின் பிரபல பின்னணி பாடகர். வித்தியாசமான குரல் படைத்தவர். நிறைய பாடல்களை கேட்டிருக்கிறேன்.

வாட்ட சாட்ட பேர்வழியிடம் 'கமுகரவில் நானறிந்த ஒரு பிரபலம் இருக்கிறாரே'
என்று ஆரம்பித்தேன்.
'யார் அவர்' என்று அவர் வினவினார்.
'கமுகர புருஷோத்தமன், பிரபல பாடகர், அவர் பாட்டை கேட்டிருக்கிறேன்' என்றேன்.

அவர் முகத்தில் ஆச்சரியம். தமிழ்நாட்டில் ஒரு கடையில் உட்கார்ந்து கொண்டு டைப் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தமிழனிடம் இதை எதிர்பார்த்திருக்கமாட்டார் என்று வெற்றி பெருமிதத்துடன் நான் அவர் முகத்தை நோக்கினேன்.

'அவர் எனது தந்தை' என்று அவர் சலனமில்லாமல் சொன்னார். மகிழ்வை மெதுவாக வெளிப்படுத்தினார். சந்தேகத்துடன் 'இப்ப அவர் இருக்கிறாரா' என்று வினவினேன்.
'இல்லை, இருந்தால் இப்படி கோயம்புத்தூரில் ஒருவர் தன்னை விசாரித்தார் என்று தெரிந்து மகிழ்ந்திருப்பார்'.

அன்று முழுவதும் நான் நானாக இல்லை.

3 comments:

M.Rishan Shareef said...

ஊர் பெயர் சொன்னவுடன் அவ்வூரிலுள்ள பிரசித்தி பெற்ற ஒருவரது பெயரைச் சுட்டிக் கேட்கப்படும்பொழுது அதுவும் அவர் தனக்கு நெருங்கிய சொந்தமாக இருப்பின், அம்மகிழ்ச்சி சொல்லிலடங்காதது. எனக்கு இந்த அனுபவம் இருக்கிறது. திரு.புருஷோத்தமனின் வாரிசின் உணர்வுகளை நான் உணர்ந்திருக்கிறேன்.

SierrA ManiaC said...

My dad too has this particular habit. He is also developing the same with me. It helps in lot of ways.

And I have also felt the enormous pride in my field whenever some stranger asks about my dad. Especially when a really unknown stranger asks are you son of _______________? in awe.

I always think good old days.

Shobha said...

Real coincidence that the person who came to you was the singer's son.
Shobha