Friday, December 5, 2008

ஏழாவது மனிதன்


எங்கள் வீடும் தொழிலும் டவுன் ஹால் 5 முக்கு பகுதியில் உள்ளன. இங்கு ஓட்டல் மனோகரா என்ற புகழ் பெற்ற பிரியாணி ஓட்டல் இருந்தது. இதன் உரிமையாளர் மைனர் நாராயணன். வீடும் எங்கள் ஏரியாவில்தான். இவரது மகன் வேலாயுதன் நாயர்; எம்.ஜி.யார் போன்ற தோற்றம். இன்னொரு புகழ் பெற்ற சென்ட்ரல் பிரியாணி கடையின் முதலாளியான வேலாயுதம் நாடாருடன் தொழில் பங்குதாரராக இருந்து நிரைய திரைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இன்னொரு சுவாரசியம்-இவர்களுடைய திரைப்படங்களுக்கு பேனர் கட் அவுட் வரைந்து கொடுப்பவர் வேலாயுதம் பிள்ளை (அட, எங்கப்பா! என்ன பொருத்தம்)

நாயருக்கு ரெயின்போ தியேட்டருக்கு எதிரில் இன்னொரு ஓட்டல்/டீக்கடை இருந்தது. ரெயின்போவுக்கு ஆங்கிலப்படம் பார்க்க வரும் எந்த அறிவு/அறிவில்லாத ஜீவியும் இங்கே ஒரு டீயும் தம்மும் அடிக்காமல் போகமாட்டார்கள். இவரது மகன் ஒல்லியாக எங்கள் பகுதியில் சுற்றிக்கொண்டிருப்பான். ஒரு நாள் எங்கள் கடைக்கு ஒரு கவருடன் வந்தான்(ர்). ஏதோ அவருடைய அப்பா கொடுத்துவிட்டிருக்கிறர் என்று நினைத்து, என்ன என்றேன்.
'நான் நடிச்ச படம் ஒண்ணு இந்த வாரம் ராயல் தியேட்டரில் ரிலீசாகுது, காந்திபுரத்தில் பெரிய ஹோர்டிங் வெக்கணும், இந்த ஸ்டில்லை வைத்து கொஞ்சம் முகத்தில் ஆக்ஷனோடு வரையணும்'.
எனக்கு ஒன்றும் புரியவில்லை, இந்த பையன் நடிக்கிறானா..
'படம் பேரு?'
கேட்டவுடன் மகிழ்ச்சியடைந்தேன், நானும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த படம்தான். இயக்குனர் பூனே இன்ஸ்டிடியூட் மாணவர் ஆயிற்றே!
'உங்கப்பா சொல்லவேயில்லையே, சரி செய்துடறேன்.'
வரைந்து வைத்தேன். அவரும் உடன் இருந்தார். கல் வீசினால் விழும் தூரம்தானெ தாத்தா வீடு.
படம் ரிலீசன்ரு தியேட்டரில் ஆளே இல்லை. என்னைப்போன்ற தீவிரவாதிகளும், அவர்களுடைய ஓட்டல் சப்ளையர்களும்.

அவர் எங்கோ போய்விட்டார்.இப்போது தன் வயதுக்கு மீறிய தோற்றத்துடன் காணப்படுகிறார். எனக்கு அவருடைய நடிப்பு மிகவும் பிடிக்கும். அதற்க்கு பிறகு சந்தித்ததில்லை.

படம் : ஏழாவது மனிதன்
நடிகர் : ரகுவரன்.

இப்போது அவர் இல்லை என்பதை நம்ப முடியவில்லை.

6 comments:

Anonymous said...

Vanakkam Jeeva sir..

Intha padathula enakkum mikavum piditha paadal enathu abimanaa padakar Dr.SPB avarkal bit song paadiyurupaar Bharathiyar song athaiyum unga nandraka vithiyaamana paadal athu ethuvendru ungal ookikamudikiratha?

john said...

A Historical moment Jeeva sir....

RAJI MUTHUKRISHNAN said...

Nice, Jeevaji. He was a good actor, wasn't he. But too young to die.

manoharan said...

அருமையான நடிகர். சாந்தமாக, சப்பத்மில்லாமல் பேசி கூட வில்லத்தனம் செய்யலாம் என்று நிரூபித்தவர். திரை உலகின் பெரிய இழப்புக்களில் ஒன்று இவர் மரணம். இவர் திருமதி ரோகினியும் சிறந்த நடிகை.

ஜீவா : மோதிரக் கையால் குட்டுப் பட்டிருக்கிறார், அது தான்.

pavaisankar said...

Rainbow எதிரில் உள்ள hotel ல் சாப்பிட்டு இருக்கிறேன்.

Unknown said...

Jeeva
I was very crazy on Manohara Hotel's ( near Sowdamman Koil) Mutton & Chicken Gravy that I used to buy in a tiffin box for Re.1/= . It used to be very thick and tasty.