Friday, April 8, 2016
Thursday, January 14, 2016
பொங்கல் வாழ்த்துக்களும் ஒற்றை சீட் காலண்டர்களும்
பொங்கல்
வாழ்த்துக்களும் ஒற்றை சீட் காலண்டர்களும் நம் தற்போதைய தலைமுறை அறியாத விஷயங்கள்.
வருடம் முழுவதும் ஒற்றை சீட் காலண்டரும் பாட்டு புத்தகங்களும் விற்கும் மலர்விழி நிலையம் டிசம்பர் மாதம் வந்தவுடனேயே மேலும் பிசியாகிவிடும்.
சிவகாசியிலிருந்து வந்து குவியும் பார்சல்களை பிரித்து அடுக்குவார்கள். அத்தனையும்
வித விதமான பொங்கல் வாழ்த்துக்கள் ! வார்னிஷ் மணக்கும் பள பள அட்டைகளில் வண்ணமிகு ஓவியங்கள்!
போஸ்ட் கார்டுகளாக ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பும் வாழ்த்து முதல் கவர்களில் வைக்கும் மடிப்பு
வாழ்த்துக்களும், விரிக்கும்போது பல வித வடிவம் எடுக்கும் வாழ்த்துக்களுமாக குவிந்திருக்கும்.
இரவும் பகலுமாக வேலை. காலண்டர் சீசனும் அப்போது இருப்பதால் அதுவும் கூடவே நடக்கும்.
கெட்டி அட்டையில் ஒட்டப்பட்டு தின தாள்கள் கொண்ட கேக்குகள் இணைக்கப்பட்ட காலண்டர்கள்.
பின்னால் மினி பஞ்சாங்கமும் ஓட்டப்பட்டிருக்கும். இத்தகைய காலண்டர்கள் இப்போதும் பழக்கத்தில்
இருக்கின்றன.
ஒற்றை
சீட் காலண்டர்களில் பெரும்பாலும் ஒரு பெரிய
படமும், நிறுவனத்தின் பெயரும், சும்மா பெயருக்கு
ஒரு குட்டி நாட்காட்டியும் அச்சிடப்பட்டிருக்கும்.
பெரும்பாலும் நாட்காட்டியின் அச்சு கலங்கி...ஒன்றுமே தெரியாத அளவில்தான் இருக்கும்.
கொண்டையராஜ் , ராமலிங்கம், ராஜா போன்ற ஓவியர்கள் வரைந்த விதவிதமான கடவுளர் படங்களும்
, பிரபல நடிகர்களின் படங்களும், சில சமயம் அரசியல் தலைவர்களின் படங்களும் இடம்பெற்றிருக்கும்!
எம்ஜியார்தான் இந்த காலண்டர்களின் நாயகன். பிறகு ராமராஜன் உச்சத்திலிருக்கும்போது அவரும்
ஒரு காலண்டர் நாயகனாக திகழ்ந்தார். நிறுவனங்களில்
காலண்டர் ஆர்டர் எடுக்கும் ஏஜெண்டுகள் கையில் ஒரு பெரிய ஆல்பத்துடன் ஒரு படையாக இயங்குவார்கள்.
டிசம்பரில்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு வரை அந்த வாழ்த்துக்கள் ஓடும். பிறகு பொங்கல் வாழ்த்துக்கள் சூடு பிடிக்க துவங்கும். இரவும் பகலும் வாடிக்கையாளர்கள்,
சில்லறை வியாபாரிகள் எனக் களை கட்ட துவங்கும். பொதுவாக, உழவர்கள் சார்ந்த விஷயங்கள்,
சினிமா நடிகர்கள், என ஓவியங்களும் புகைப்படங்களும் இந்த வாழ்த்துக்களில் இடம் பெறும்.
கே.மாதவனின் ஓவியங்கள் மிகப்பிரபலமானவை. குட்டி குட்டி கவிதைகள் வாழ்த்தாக அச்சிடப்பட்டிருக்கும்.
எத்தனை
பேருக்கு வேலையளித்தன இந்த வாழ்த்துக்கள். என்னிடம் ஒரு பெரும் தொகுப்பே இருந்தது... காலம் அவற்றை அழித்துவிட்டது!
அந்த
காலகட்டத்தில் தபாலில் வாழ்த்துக்கள் அனுப்பாத நபர்களே கிடையாது. அஞ்சல் அலுவலகங்கள்
நிரம்பி வழிந்தன. தபால்காரர்கள் பெரும் மூட்டைகளை சுமந்து கொண்டு டெலிவரி செய்து கொண்டிருப்பார்கள்.
கணிணியும்
தொழில்நுட்பமும் அழித்தொழித்த விஷயங்களில்
இந்த வாழ்த்துக்களும் இடம் பெற்றன!
Tuesday, January 5, 2016
ஜனவரி 6 சர்வதேச வேட்டி தினமாமே!
நான்
13 வயதிலேயே வேட்டி கட்ட துவங்கிவிட்டேன்.
18
வயது இருக்கும்போது, ஒரு கல்யாணத்திற்கு நாகர்கோவில் கிளம்பினேன். பஸ் பயணம். வேட்டி
கட்டிக்கொண்டு கிளம்பிய என்னை பார்த்து என் தந்தைக்கு கடும் கோபம் வந்துவிட்டது. ஒரு
பி.ஏ .படிக்கிற பையன் பேண்ட் போடாமல் வேட்டி
கட்டிக்கொண்டு பயணிப்பதா, அதுவும் சொந்த ஊருக்கு என்று கடும் கோபம். வழக்கம்போல அவர்
பேச்சை கேட்காமல் புறப்பட்டு சென்று நாகர்கோவிலில் வேட்டியில் சுற்றிக்கொண்டு இருந்தேன்.
கல்லூரிக்கு
ஒரே ஒரு நாள் வேட்டி கட்டிக்கொண்டு சென்று, அதை உருவி விட்டு என் நண்பர்கள் செய்த கலாட்டாவினால்,
பின்னர் அந்த பழக்கம் தொடரவில்லை.
பின்னர்
வேட்டி நெசவுக்கு புகழ் பெற்ற நாகர்கோவில் வடசேரியில் எனக்கு பெண்ணும் பார்த்து அங்கேயே
திருமணமும் செய்து வைத்தனர். திருமண மேடையில்
பட்டுவேட்டி கட்டவில்லை... சுயமரியாதை திருமணம். சாதாரண கைத்தறி வேட்டிதான்.
இன்றுவரை என் இடுப்பில் பட்டு ஏறவில்லை .
எனக்கு
லுங்கி பிடிக்காது...பெரும்பாலும் சாயவேட்டியைதான் வீட்டில் உடுத்துவது . நரசிம்மா
(மோகன்லால் அந்த படத்தில் கலர் கலராக வேட்டிகளை
உடுத்துவார்) வேட்டி நம்ம பேவரிட்.
சமீப
காலங்களில் வேட்டிக்கு அளிக்கப்படும் ஊடக விளம்பரங்கள் என்னை பிரமிக்க வைக்கின்றன.
ஜிப், வெல்க்ரோ, பாக்கெட் என்று அசர அடிக்கின்றனர். சமீப காலங்களில் துக்க வீடுகளில்
கூட, துணிமணிகள் வழங்கும் சடங்குகளில், பிராண்டட்
வேட்டி பார்சல்களை பார்க்கிறேன்.
என்னிடமும்
கூட ஒரு பிராண்டட் வேட்டி சட்டை இருக்கிறது. என்னுடைய தேசிய விருதுக்கு பிறகு நடந்த
பாராட்டு கூட்டங்களில் ஒன்று, கோவை சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் நடைபெற்றபோது , ஒரு
நினைவுப்பரிசையும் வழங்கினார்கள். வீட்டில் வந்து பிரித்தபோது இருந்தது ராம்ராஜ் வேட்டியும்
சட்டையும்...நான் அப்போது அடைந்த மகிழ்ச்சிக்கு இணையேயில்லை. நிச்சயம் அந்த விலை கொடுத்து
வாங்க எனக்கு மனம் வராது!
Subscribe to:
Posts (Atom)