பொங்கல்
வாழ்த்துக்களும் ஒற்றை சீட் காலண்டர்களும் நம் தற்போதைய தலைமுறை அறியாத விஷயங்கள்.
வருடம் முழுவதும் ஒற்றை சீட் காலண்டரும் பாட்டு புத்தகங்களும் விற்கும் மலர்விழி நிலையம் டிசம்பர் மாதம் வந்தவுடனேயே மேலும் பிசியாகிவிடும்.
சிவகாசியிலிருந்து வந்து குவியும் பார்சல்களை பிரித்து அடுக்குவார்கள். அத்தனையும்
வித விதமான பொங்கல் வாழ்த்துக்கள் ! வார்னிஷ் மணக்கும் பள பள அட்டைகளில் வண்ணமிகு ஓவியங்கள்!
போஸ்ட் கார்டுகளாக ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பும் வாழ்த்து முதல் கவர்களில் வைக்கும் மடிப்பு
வாழ்த்துக்களும், விரிக்கும்போது பல வித வடிவம் எடுக்கும் வாழ்த்துக்களுமாக குவிந்திருக்கும்.
இரவும் பகலுமாக வேலை. காலண்டர் சீசனும் அப்போது இருப்பதால் அதுவும் கூடவே நடக்கும்.
கெட்டி அட்டையில் ஒட்டப்பட்டு தின தாள்கள் கொண்ட கேக்குகள் இணைக்கப்பட்ட காலண்டர்கள்.
பின்னால் மினி பஞ்சாங்கமும் ஓட்டப்பட்டிருக்கும். இத்தகைய காலண்டர்கள் இப்போதும் பழக்கத்தில்
இருக்கின்றன.
ஒற்றை
சீட் காலண்டர்களில் பெரும்பாலும் ஒரு பெரிய
படமும், நிறுவனத்தின் பெயரும், சும்மா பெயருக்கு
ஒரு குட்டி நாட்காட்டியும் அச்சிடப்பட்டிருக்கும்.
பெரும்பாலும் நாட்காட்டியின் அச்சு கலங்கி...ஒன்றுமே தெரியாத அளவில்தான் இருக்கும்.
கொண்டையராஜ் , ராமலிங்கம், ராஜா போன்ற ஓவியர்கள் வரைந்த விதவிதமான கடவுளர் படங்களும்
, பிரபல நடிகர்களின் படங்களும், சில சமயம் அரசியல் தலைவர்களின் படங்களும் இடம்பெற்றிருக்கும்!
எம்ஜியார்தான் இந்த காலண்டர்களின் நாயகன். பிறகு ராமராஜன் உச்சத்திலிருக்கும்போது அவரும்
ஒரு காலண்டர் நாயகனாக திகழ்ந்தார். நிறுவனங்களில்
காலண்டர் ஆர்டர் எடுக்கும் ஏஜெண்டுகள் கையில் ஒரு பெரிய ஆல்பத்துடன் ஒரு படையாக இயங்குவார்கள்.
டிசம்பரில்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு வரை அந்த வாழ்த்துக்கள் ஓடும். பிறகு பொங்கல் வாழ்த்துக்கள் சூடு பிடிக்க துவங்கும். இரவும் பகலும் வாடிக்கையாளர்கள்,
சில்லறை வியாபாரிகள் எனக் களை கட்ட துவங்கும். பொதுவாக, உழவர்கள் சார்ந்த விஷயங்கள்,
சினிமா நடிகர்கள், என ஓவியங்களும் புகைப்படங்களும் இந்த வாழ்த்துக்களில் இடம் பெறும்.
கே.மாதவனின் ஓவியங்கள் மிகப்பிரபலமானவை. குட்டி குட்டி கவிதைகள் வாழ்த்தாக அச்சிடப்பட்டிருக்கும்.
எத்தனை
பேருக்கு வேலையளித்தன இந்த வாழ்த்துக்கள். என்னிடம் ஒரு பெரும் தொகுப்பே இருந்தது... காலம் அவற்றை அழித்துவிட்டது!
அந்த
காலகட்டத்தில் தபாலில் வாழ்த்துக்கள் அனுப்பாத நபர்களே கிடையாது. அஞ்சல் அலுவலகங்கள்
நிரம்பி வழிந்தன. தபால்காரர்கள் பெரும் மூட்டைகளை சுமந்து கொண்டு டெலிவரி செய்து கொண்டிருப்பார்கள்.
கணிணியும்
தொழில்நுட்பமும் அழித்தொழித்த விஷயங்களில்
இந்த வாழ்த்துக்களும் இடம் பெற்றன!
6 comments:
நியாயமான ஆதங்கம்!உறவுகளிடமிருந்தும்
நண்பர்களிடமிருந்தும்
வரும் வாழ்த்து அட்டைகளைக்
கொண்டுவரும் தபால்காரரை
எதிர்பார்த்திருக்காத வீடே
இருக்காது! கலர்கலராக வாழ்த்து
அட்டைகள் வாங்கி அதற்கு
தபால்ஆபீஸில் ஸடாம்ப் வாங்கி ஒட்டி
தனித்தனியாக வைக்கப்பட்டிருக்கும்
தபால்பெட்டிகளில் போடும் பெருமிதம்! எனது வரையும் ஆசைக்குத்தீனி போட்டதே இந்த வாழ்த்து அட்டைகள் தான்! இன்னும் சில அட்டைகள் சொத்துபோல்
மீந்துள்ளன!
நியாயமான ஆதங்கம்!உறவுகளிடமிருந்தும்
நண்பர்களிடமிருந்தும்
வரும் வாழ்த்து அட்டைகளைக்
கொண்டுவரும் தபால்காரரை
எதிர்பார்த்திருக்காத வீடே
இருக்காது! கலர்கலராக வாழ்த்து
அட்டைகள் வாங்கி அதற்கு
தபால்ஆபீஸில் ஸடாம்ப் வாங்கி ஒட்டி
தனித்தனியாக வைக்கப்பட்டிருக்கும்
தபால்பெட்டிகளில் போடும் பெருமிதம்! எனது வரையும் ஆசைக்குத்தீனி போட்டதே இந்த வாழ்த்து அட்டைகள் தான்! இன்னும் சில அட்டைகள் சொத்துபோல்
மீந்துள்ளன!
Post a Comment